உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பஞ்சவடீயில் 19ம் தேதி அனுமன் ஜெயந்தி

 பஞ்சவடீயில் 19ம் தேதி அனுமன் ஜெயந்தி

புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நேற்று வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. புதுச்சேரி-திண்டிவனம் சாலையில், பஞ்சவடியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 19ம் தேதி அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை நடக்கிறது. இதற்கான பூஜை நேற்று மாலை அனுக்ஞை, மகா சங்கல்பம், புண்யா ஹவாசனம் மற்றும் வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. இன்று காலை முதல் காலம், யஜமான சங்கல்பம், புண்யாஹவாசனம், கும்பஸ்தாபனம், அக்னிமதனம், கும்ப ஆவாஹனம், ஜபம், மூலமந்திர ஹோமமும், மாலை 5:00 மணிக்கு இரண்டாம் காலம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை லட்சார்ச்சனை நடக்கிறது. நாளை (17ம் தேதி)யும், நாளை மறுநாள் 18 ம் தேதியும் காலை மற்றும் மாலையில் யாக பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சஸூக்த ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை, லட்சார்ச்சனை நடக்கிறது. வரும் 19ம் தேதி அனுமன் ஜெயந்தியையொட்டி அன்று காலை 7:00 மணிக்கு யஜமான மகா சங்கல்பங்கள், புண்யாஹவாசனம், பஞ்சஸூக்த ஹோமம், மூலமந்திர ேஹாமம், லட்சார்ச்சனை பூர்த்தி நடக்கிறது. தொடர்ந்து, காலை 8:30 மணிக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களுடன், மூலவரான 36 அடி உயர ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து, ஏழாம் காலம், பூர்த்தியாகி கடம் புறப்பாடு மற்றும் கெட அபிேஷகம் நடக்கிறது. பின், சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, நடை திறக்கப்பட்டு, புஷ்ப விருஷ்டி வேத கோஷம், சோடச உபசாரம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு சீதாராம திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை