உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாஜி முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து

மாஜி முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து

புதுச்சேரி: பிறந்த நாள் விழா கொண்டாடிய, முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு, உருளையன்பேட்டை தொகுதி வட்டார காங்., தலைவர் ஆறுமுகம் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய அயலக காங்., ஐரோப்பா மாநிலத்தின் பொதுச்செயலாளர் முஹமது இர்ஷாத் சார்பாக, உருளையன்பேட்டை வட்டார காங்., தலைவர் ஆறுமுகம் தலைமையில் காங்., நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாநில காங்., பொது செயலாளர்கள் ரகுமான், சந்திரிகா, பாபுலால், சகுந்தலா, தியாகராஜன், வேல்முருகன், காங்., நிர்வாகிகள் ஜான் ஜெயினுலா புதீன், புகழேந்தி, மரி சிவாஜி ராவ், ஆப்தர், சுரேஷ் ,பன்னீர்செல்வம், வேலு, செல்வம், மீனா பிரபாகரன் மற்றும் பல கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ