உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் எம்.எல்.ஏ.,விற்கு பிறந்த நாள் வாழ்த்து

முன்னாள் எம்.எல்.ஏ.,விற்கு பிறந்த நாள் வாழ்த்து

பாகூர், : பாகூரில் நடந்த முன்னாள் எம்.எல்.ஏ., தனவேலுவின் பிறந்த நாள் விழாவில், அமைச்சர்கள் மற்றும், ஆதரவாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.விழாவில், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், பாகூர் வேணுகோபால், என்.டி., பேரவை நிர்வாகிகள்,ஆதரவாளர்கள், தொண்டர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, கேக் வெட்டி, சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ., தனவேலுவிற்கு, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவையொட்டி, 3,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முன்னதாக, பாகூர் துாக்குபாலம் சந்திப்பில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ., தனவேலுக்கு, அவரது ஆதாரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ., தனவேலு, நண்பர் பாகூர் வேணுகோபால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை