வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருந்தாத மக்கள், ஹாப்பி ஸ்ட்ரீட் ஒரு கலாச்சார சீர்கேடு, போதை பொருட்கள் புழங்கும் இடம்.
மேலும் செய்திகள்
கடற்கரை துாய்மை பணி
22-Sep-2024
புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரை சாலையில் 3வது முறையாக, தனியார் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான இளம் வயதினர் கலந்து கொண்டு உற்காக நடனம் ஆடினர். ஆங்காங்கே கும்பல் கும்பலமாக இளைஞர்கள் நடனம் ஆடி மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரை சாலையில் குவிந்ததால், கடற்கரைச் சாலை மக்கள் தலைகளாக காணப்பட்டது. உற்சாக மிகுதியில் கடற்கரைச் சாலையோரம் இருந்த மதில்சுவர்கள், ஸ்பீக்கர் பாக்ஸ்கள் மீது இளைஞர்கள் ஏறி நடனம் ஆடினர். உள்ளூர் போலீசாருடன், பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல கலை நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 5 பேர் மயக்கம்
கடந்த ஆண்டு அக்., 22ம் தேதி முதல் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 2வது ஹாப்பி ஸ்ட்ரீட் நடந்தது. அப்போது, இளைஞர்கள் மதுபாட்டில்கள், செருப்பை வீசி சென்றனர். இதனால் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நேற்று 3வது நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 5க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
திருந்தாத மக்கள், ஹாப்பி ஸ்ட்ரீட் ஒரு கலாச்சார சீர்கேடு, போதை பொருட்கள் புழங்கும் இடம்.
22-Sep-2024