உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் வறுமை குறைந்துள்ளதா? மக்கள் முன்னேற்ற கழகம் கேள்வி

புதுச்சேரியில் வறுமை குறைந்துள்ளதா? மக்கள் முன்னேற்ற கழகம் கேள்வி

புதுச்சேரி: புதுச்சேரியில் வறுமை குறைந்துள்ளதா என புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் கேள்வி எழுப்பி உள்ளது. அதன் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை; சமீபத்தில் உலக வங்கி வெளியிட்டுள்ள இந்திய வறுமை மற்றும் சமத்துவம் என்ற அறிக்கையில், இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில், சுமார் 49.6 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முன்னேற்றத்தில் புதுச்சேரியின் பங்கு என்ன. கடந்த 12 ஆண்டுகளில் புதுச்சேரியில் எத்தனை குடும்பங்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளன? எத்தனை தனிநபர்கள் வறுமைக் கோட்டிற்கு மேலே வந்துள்ளனர்? வறுமையின் சதவீதம் எந்த அளவுக்குக் குறைந்துள்ளது? இத்தகைய விவரங்களை புதுச்சேரி அரசு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா? இதற்கான புள்ளி விவரங்கள் அரசிடம் இருக்க வேண்டாமா? புதுச்சேரி வறுமைக் கோட்டிற்குக் கீழ் 57 சதவீத ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இந்தியாவின் வறுமை விகிதம் 16.1 சதவீதமாகக் குறைந்துள்ள நிலையில், புதுச்சேரியில் மட்டும் ஏன் இவ்வளவு அதிகம். வறுமையிலிருந்து மக்களை விடுவிப்பதில் தான் ஓர் அரசின் வெற்றி அடங்கியுள்ளது என்பதைப் புதுச்சேரி அரசு உணர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ