உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.வி.ஆர்., மருத்துவ மையத்தில்  உடல் நல பரிசோதனை முகாம் 

எம்.வி.ஆர்., மருத்துவ மையத்தில்  உடல் நல பரிசோதனை முகாம் 

புதுச்சேரி: உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, லாஸ்பேட்டை இ.சி.ஆர்., மெயின்ரோட்டில் அமைந்துள்ள எம்.வி.ஆர்., மருத்துவமையத்தில் உடல் நல பரிசோதனை முகாம் நடந்தது.முகாமில், டாக்டர் வித்யா கூறியதாவது; உலக நீரிழிவுநோய் தினத்தை முன்னிட்டு, கடந்த 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை உடல் நல பரிசோதனை முகாம் நடக்கிறது. நீரிழிவு நோய் என்பது இதயம், சிறுநீரகம் மற்றும் கண்கள் உள்ளிட்ட உடலின் பல உறுப்புகளை பாதிக்கும் இன்சுலின் குறைபாடுஅல்லதுநாள்பட்ட வளர்சிதை மாற்றக் கோளாறு ஆகும். கேரளா, டெல்லி, பஞ்சாப், கோவா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்துதமிழ் நாட்டிலும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்தியாவில் 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார். பின், நீரிழிவு மேலாண்மையின் முக்கியத்துவம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது குறித்து விளக்கினார். முகாமிற்கு வருபவர்கள் காலை 8:00 மணிக்குள் வெறும் வயிற்றில் வர வேண்டும். காலை உணவு இலவசம். பரிசோதனை முடிவுகள் வர 6;00 மணி நேரம் வரை ஆகலாம். நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவரின் ஆலோசனையை பெற முன்பதிவிற்கு 9047791662,0413-2252662 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.ஏற்பாடுகளை மருத்துவமனை மேலாளர்தேவதாஸ், சச்சிதானந்தம், செலின்,சந்திரவதனி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ