உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வயிற்றுப் போக்கால் பாதித்த பகுதியில் சுகாதார குழு ஆய்வு

வயிற்றுப் போக்கால் பாதித்த பகுதியில் சுகாதார குழு ஆய்வு

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி, கோவிந்தசாலை பகுதியில் திடீரென 20க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள், துணை இயக்குநர் ஷம்மிமுனிசா பேகம் ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்களின் உத்தரவின்பேரில், மாநில கண்காணிப்பு அதிகாரி விவேகானந்தா, மாநில தொற்றுநோயியல் நிபுணர் ஸ்ரீவித்யா, மாநில நு ண்ணுயிரியலாளர் அருணா ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் விரைவு சுகாதார குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், ஓதியஞ்சாலை சுகாதார நிலைய ஊழியர்களுடன் இணைந்து, முடக்கு மாரியம்மன் கோவில் தெரு, வாஞ்சிநாதன் தெரு, சுப்ரமணிய சிவா தெரு, அந்தோணியார் கோவில் தெரு, குபேர் நகர், பாரதிதாசன் தெரு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று வயிற்றுப்போக்கு இருப்பதாக சந்தேகப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கினர். பின், பொதுமக்கள் அனைவரும் தண்ணீரை முறையாக கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும். சரியான முறையில் கை கழுவும் நுட்பங்கள் குறித்து அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை