மேலும் செய்திகள்
அரசு தொடக்கப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
23-Aug-2025
புதுச்சேரி : ஜிப்மர் செவிலியர் கல்லுாரி சார்பில் ஆரோக்கியமான பெண்-வலிமையான குடும்ப திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிரதமர் மோடி அண்மையில் ஆரோக்கியமான பெண் - வலிமையான குடும்ப திட்டத்தினை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஜிப்மர் செவிலியர் கல்லுாரி சார்பில் கர்ப்பக்காலம் மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய கால மனநல குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கர்ப்பகாலத்தில் ஏற்படும் மன நல சிக்கல்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. தொடர்ந்து. ஜிப்மர் செவிலியர் கல்லுாரி, சேதராப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பெண்களுக்கான சுகாதார முகாம் நடந்தது. பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மகளிருக்கு நடத்தப்பட்டன. ஊட்டச்சத்து அவசியம், ஆரோக்கியம், சுகாதாரம் குறித்து கண்காட்சி நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்ட நிகழ்ச்சி வாயிலாக சுகாதாரம் குறித்தும் விளக்கப்பட்டது.
23-Aug-2025