வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Sedou R
செப் 20, 2026 10:30
பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று இரவு சூறைக் காற்றுடன் கன மழை பெய்ததால் நகரப்பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. புதுச்சேரியில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. மாலை முதல் வானம் மேகம் மூட்டதுடன் காணப்பட்ட நிலையில், இரவு 7:00 மணியளவில் சூறைகாற்றுடன் கனமழை பெய்தது. கனமழையால் நெல்லித்தோப்பு சிக்னலில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இதேபோல் கோரிமேடு, முருகா தியேட்டர் அருகே சாலையில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. நகரப்பகுதியில் முக்கிய இடங்களில் மழைநீர் சூழ்ந்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கனமழையால் சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது