உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நிரந்தர பணி வழங்க கோரி வாரிசுதாரர்கள் போராட்டம்

நிரந்தர பணி வழங்க கோரி வாரிசுதாரர்கள் போராட்டம்

புதுச்சேரி :நிரந்தர பணி வழங்க கோரி வாரிசு தாரர்கள், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.பொதுப்பணித்துறை வாரிசு தாரர்கள் சங்க தலைவர் ஜெயசந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சந்தியபிரகாஷ் முன்னிலை வகித்தார். எல்லா துறைகளிலும் பணியின் போது, உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு 5 சதவீத அடிப்படையில் நிரந்தர பணி வழங்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணித் துறையில் பணி வழங்கப்படாமல் உள்ளது. வாரிசு தாரர்கள் 192 பேருக்கு நிரந்த பணிக்கு பதிலாக, வவுச்சர் ஊழியர்களாக 18 ஆயிரம் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி