உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்

புதுச்சேரியில் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்

புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க இருசக்கர வாகனங்களில் செல்பவர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென சூப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் கடந்த காலங்களில் 3 முறை கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டு, நடைமுறை சிக்கல்களால் கைவிடப்பட்டது.இந்நிலையில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்த போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின், 12ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் சென்றால், ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதையடுத்து போக்குவரத்து போலீசார் பள்ளிகள், கல்லுாரிகள், முக்கிய சாலை சந்திப்புகளில் ஹெல்மெட் அவசியம் குறித்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இதற்கிடையே, கட்டாயம் ஹெல்மெட் அணிவதை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர். இதுதொடர்பாக, கவர்னர் கைலாஷ்நாதன் என்ன செய்வர் என பொது மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியில் பேசிய கவர்னர் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென அறிவுறுத்தினார்.இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் இன்று (12ம் தேதி) முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என உறுதியானது. போலீசார் முக்கிய சாலை சந்திப்புகளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடித்து அபராதம் விதிக்க தயாராகி வருகின்றனர். எனவே, இரு சக்கர வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்துவதை தவிர்க்க, கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள், இளை ஞர்கள் ஹெல்ெமட்டை வாங்குவதற்கு கடை வீதிகளில் குவிந்தனர். பெரும் பாலான கடை களில் கூட்ட நெரிசலுக்கு இடையே ஹெல்மட்டை வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

visu
ஜன 13, 2025 09:16

ஹெலெமேட் அணிவதில் பிரச்சினையில்லை அதை எங்க வைப்பது என்பதே பிரச்சினை வண்டியில் வைத்தால் திருட்டு போகிறது அரசு அலுவலகங்களில் உள்ளே கொண்டு வராதே என்பார்கள் இல்லை ஒரு கையில் அதை வைத்துக்கொண்டே எல்ல வேலைகளையும் செய்ய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை