உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நெடுஞ்சாலை பாதுகாப்பு பணி குழு கூட்டம்

 நெடுஞ்சாலை பாதுகாப்பு பணி குழு கூட்டம்

புதுச்சேரி: மாவட்ட நெடுஞ்சாலை பாதுகாப்பு பணிக் குழுவின் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். தேசிய நெடுஞ்சாலை ஆணையம், துணை கலெக்டர், காவல் துறை, போக்குவரத்து துறை, நகர மற்றும் கிராம திட்டமிடல் துறை, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், பொதுப் பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் மற்றும் பழுதாகி நிற்கும் வாகனங்களை அகற்றுவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். விபத்து பகுதிகளை அடையாளம் காணுதல், மற்றும் நெடுஞ்சாலை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல் ஆகிய பணிகளை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை