உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாரம் ஒரு நாள் விடுமுறை ஊர்க்காவல் படை வீரர்கள் கோரிக்கை

வாரம் ஒரு நாள் விடுமுறை ஊர்க்காவல் படை வீரர்கள் கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரி ஆயுதப்படை பிரிவு சார்பில் ஊர்க்காவல் படை, கமாண்டோ படை வீரர்கள் குறை கேட்பு கூட்டம் கோரிமேடு போலீஸ் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. சீனியர் எஸ்.பி., இஷா சிங் தலைமை தாங்கி, குறைகளை கேட்டறிந்தார். ஆயுதப்படை எஸ்.பி., ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படை மற்றும் கமாண்டோ பிரிவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊர்க்காவல் படை வீரர்கள் தங்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். போலீஸ் கான்ஸ்டபிளுக்கு வழங்குவது போன்று தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். சீருடை அலாவன்ஸ் உயர்த்தி வழங்க வேண்டும். கமாண்டோ வீரர்கள், ரோந்து பணியின்போது, அடுத்தடுத்து பணிகள் வழங்கப்படு வதால், ஏற்படும் பணிசுமையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோந்து பணியின்போது, ஒரே வாகனத்தில் ஆண், பெண் என இருவரும் அமர்ந்து செல்வதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. கமாண்டோ சீருடை துணிகளை மாற்றம் செய்து வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதற்கு, சீனியர் எஸ்.பி., உயர் அதிகாரியிடம் கலந்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். காரைக்கால் போலீஸ் புலம்பல் காரைக்காலில் சமீபத் தில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை மீண்டும் ஒப்படைக்க லஞ்சம் வாங்கிய, சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட வழக்கில், எந்தவித குற்றமும் செய்யாமல் உயரதிகாரிகள் கொடுத்த வேலையை செய்ததற்காக, அந்த போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய ஊர்காவல் படை வீரரான தன்னை புதுச்சேரிக்கு மாற்றிவிட்டனர். இதனால், காரைக்காலில் வசித்து வரும் த னது குடும்பத்தினரை கவனித்து கொள்ள முடியாமல் மிகவும் சிரமப்படுவதால், தன்னை மீண்டும் காரைக்காலுக்கு மா ற்ற வேண்டும் என, கோரிக்கை வைத்தார். இதனால், குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை