உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரயில் மோதி ஓட்டல் மாஸ்டர் பலி

ரயில் மோதி ஓட்டல் மாஸ்டர் பலி

புதுச்சேரி: புதுச்சேரியில், தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி படுகாயமடைந்த ஓட்டல் மாஸ்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.விழுப்புரம், வளவனுார் செங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளவரசன்,27; இவர், புதுச்சேரி நோணாங்குப்பத்தில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.இவர் நேற்று முன்தினம் மாலை 6:15 மணிக்கு, உருளையன்பேட்டை, வனத்துறை அலுவலகம் அருகே உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த பயணிகள் ரயில் மோதியது.இதில், படுகாயமடைந்த இளவரசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை 6:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ