மனித வளம் வட்டார மாதாந்திர கூட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி மனித வளம் வட்டாரம் - 103வது மாதாந்திர கூட்டம், ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. சிறப்பு விருந்தினராக இ.எஸ்.ஐ., முன்னாள் இயக்குனர் சங்கரலிங்கம், பங்கேற்று பேசினார். மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி, புதுச்சேரி பல்கலைக்கழக மனித வள துறை மாணவர்கள், புதுச்சேரியில் இருந்து பல்வேறு தொழிற்சாலை மனிதவள மேலாளர்கள், வல்லுனர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முன்னாள் தலைவர் டட்லி டக்ளஸ், முன்னாள் எஸ்.பி., பாஸ்கரன், தலைவர் - நிஷா பேகம், துணை தலைவர் கிருஷ்ணராஜ், செயலாளர் வினோத்குமார், துணை செயலாளர் மகேந்திரன், பொருளாளர் ரோஜீ, துணை பொருளாளர் அருண்குமார் செய்திருந்தனர்.