உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவியிடம் பேசியவரை கொன்ற கணவர் கைது

மனைவியிடம் பேசியவரை கொன்ற கணவர் கைது

புதுச்சேரி: மனைவியுடன் மொபைல் போனில் பேசிய நண்பரை வெட்டி கொன்ற கணவன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, உப்பளம் விளையாட்டு மைதானம் பின்புறம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பாலத்தில் வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர், உழவர்கரையைச் சேர்ந்த லோடுமேன் சந்துரு, 24, என தெரிந்தது. விசாரணையில், சந்துருவும், முருங்கப்பாக்கம் வெங்கடேஷ் என்பவரும் நண்பர்கள். வெங்கடேஷ், வம்பாகீரப்பாளையத்தில், மனைவி காவியா வீட்டில் வசித்தார். வெங்கடேஷ் வீட்டிற்கு சந்துரு சென்றபோது, காவ்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் மொபைல் போனில் பேசி வந்துள்ளனர். இதையறிந்த வெங்கடேஷ், சந்துருவை கண்டித்தார். அதன் பிறகும் சந்துரு பேசியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த வெங்கடேஷ், நேற்று முன்தினம் மனைவியை, திருசெந்துார் கோவிலுக்கு அனுப்பிவிட்டு, வீட்டிற்கு சந்துருவை அழைத்து, நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது, சந்துருவை நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடேஷ் வெட்டி கொன்றார். சந்துரு உடலை பாலத்தில் வீசியது தெரிந்தது. ஒதியஞ்சாலை போலீசார், வெங்கடேஷ் உட்பட, மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை