உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  எலிபேஸ்ட் சாப்பிட்ட மனைவி பலி; தற்கொலைக்கு துாண்டிய கணவர் கைது

 எலிபேஸ்ட் சாப்பிட்ட மனைவி பலி; தற்கொலைக்கு துாண்டிய கணவர் கைது

வானுார்: வானுார் அருகே மனைவியை தற்கொலைக்கு துாண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர். வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இரும்பை ரோடு முதல் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 43; இவரது மனைவி மஞ்சுளா, 43; இவர்களுக்கு 21, 18 வயதில் 2 மகள்கள், 15 வயதில் ஒரு மகன் உள்ளனர். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட பிரச்னையில் ரமேஷ் தனது மூத்த மகள் ராஜேஸ்வரி, மகன் அப்புவுடனும், மஞ்சுளா தனது இளைய மகள் வேல்விழியுடனும் ஒரே வீட்டி ல் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 25ம் தேதி இரவு வேல்விழி குளித்து விட்டு உடை மாற்றுவதற்கு தனது அறைக்குள் சென்றுள்ளார். அப்போது, அவரது தந்தை ரமேஷ் மொபைல் போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். இதனால் வேல்விழி உடை மாற்ற முடியாமல் காத்திருந்தார். இதைப் பார்த்த மனைவி மஞ்சுளா தனது கணவரை கண்டித்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ரமேஷ், மனைவி மஞ்சுளாவை தாக்கினார். இதனால் மனமுடைந்த மஞ்சுளா, குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து தனது மகள் வேல்விழிக்கு கொடுத்து விட்டு அவரும் குடித்துள்ளார். அதில் சற்று நேரத்தில் இருவரும் மயக்கம் அடைந்தனர். உடன், இருவரையும் அவரது உறவினர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் இருந்த மஞ்சுளா சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மஞ்சுளா அளித்த புகாரின் பேரில் ரமேஷ் மீது ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த மஞ்சுளா நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து போலீசார், அந்த வழக்கை தற்கொலைக்கு துாண்டியதாக மாற்றி, ரமேைஷ கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை