உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை

 மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை

வில்லியனுார்: வில்லியனுார் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால் கணவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வில்லியனுார் அடுத்த சேந்தநத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார், 59; கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது. அய்யனார் நேற்று முன்தினம் காலையில் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். கோபமடைந்து மனைவி போலீசில் புகார் கொடுக்க சென்றார். இதணையறிந்த கணவர் அய்யனார், மனமுடைந்து வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜெயலட்சுமி புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை