உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மனைவிக்கு தகவல் தெரிவித்து தற்கொலை செய்த கணவர்

 மனைவிக்கு தகவல் தெரிவித்து தற்கொலை செய்த கணவர்

புதுச்சேரி: தந்தை இறந்ததால், மனமுடைந்து காணப்பட்ட நபர், மனைவிக்கு மொபைலில் தகவல் தெரிவித்து விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி, தாவீதுபேட், நகராட்சி குடியிருப்பை சேர்ந்தவர் மணிவண்ணன், 38; மினி வேன் உரிமையாளர். இவருக்கு ஷாலினி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். மணிகண்டனின் தந்தை ஆறுமுகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்று முதல் மணிகண்டன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே, கொம்பாக்கத்தில் உள்ள தனது மனைவியின் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த மணிகண்டன், கடந்த சில தினங்களாக தாவீதுபேட்டை நகராட்சி குடியிருப்பில் உள்ள வீட்டில் தனியாக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு மணிகண்டனை, அவரது மனைவி ஷாலினி மொபைலில் தொடர்பு கொண்டு பேசியபோது, மன உளச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஷாலினி தனது உறவினர்களுடன் தாவீதுபேட்டையில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அங்கு மணிகண்டன் வீட்டின் அறையில் துாக்கில் தொங்கி கொண்டிருந்தார். அவரை மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ