உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி பிரிந்த வேதனை கணவர் தற்கொலை

மனைவி பிரிந்த வேதனை கணவர் தற்கொலை

காரைக்கால் : மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.காரைக்கால், கோட்டுச்சேரி, வரிச்சிக்குடி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமர், 39; ஆசாரி. இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். ராமர் தினமும் மது அருந்துவது வழக்கம். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதில், அனுராதா கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றார். இதனால் மனவேதனையில் இருந்த ராமர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில், கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை