உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை  

மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை  

புதுச்சேரி: மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால், கணவர் தற்கொலை செய்து கொண்டார். முத்தரைபாளையம், சேரன் நகர், வள்ளுவர் வீதியை சேர்ந்தவர் சரவணன், 40;டிரைவர். இவரது மனைவி நிர்மலா. 28, இவருக்கு ஹரிஷ், 5; தர்ஷன், 2; என இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். சரவணனுக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டது. கடந்த, 10 நாட்களுக்கு முன், பண விவகாரம் தொடர்பாக, இருவருக்கும் இடையே பிரச்னை வந்தது. இதனால் நிர்மலா கோபித்து கொண்டு குழந்தைகளுடன் கதிர்காமத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார். அதற்கு பிறகு சரவணன் மனைவிக்கு போன் செய்து , தன்னுடைய வீட்டிற்கு வருமாறு கூறினார். ஆனால் நிர்மலா வரவில்லை. நேற்று முன்தினம் இரவு சரவணன் வேலை முடித்து, குடித்து விட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றார். அங்கு அவருடைய தாய் மொபைல் மூலம் நிர்மலாவுக்கு போன் செய்தார். ஆனால் போன் போகவில்லை. இந்நிலையில் வீட்டிற்குள் துாங்க சென்றார். காலையில் நீண்ட நேரமாக ஆகியும் அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டின் கதவை உடைத்து கொண்டு, உள்ளே சென்று பார்த்தனர். அவர் மின்விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி