உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவியிடம் வீடியோ காலில் பேசியபடி கணவர் தற்கொலை

மனைவியிடம் வீடியோ காலில் பேசியபடி கணவர் தற்கொலை

அரியாங்குப்பம்: ரம்ஜான் கொண்டாட வெளியூறு சென்ற மனைவியிடம் வீடியோ காலில் பேசியபடி, கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிதம்பரம் அடுத்த புவனகிரியை சேர்ந்தவர் உசேன் சரீப், 39; டிரைவர். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரியாங்குப்பம் வேலன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால், கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில், வீடியோ கால் மூலம்,தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என அடிக்கடி மிரட்டி வந்தார்.இந்நிலையில், உறவினர்களுடன் சேர்ந்து, ரம்ஜான் பண்டிகை கொண்டாட தனது மனைவி, குழந்தைகளுடன், கடந்த 29ம் தேதி, சொந்த ஊரான புவனகிரிக்கு சென்றுள்ளனர். அவர் மட்டும், அரியாங்குப்பத்தில் உள்ள வீட்டிற்கு வந்தார். வழக்கம் போல, மனைவிக்கு, மொபைலில் வீடியே கால் செய்து தற்கொலை செய்ய போகிறேன், என பேசி அடுத்த வினாடியில், அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்த உசேன் சரீபிற்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.புகாரின் பேரில், அரியாங்குப்பம் ஏ.எஸ்.ஐ., கணபதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த தற்கொலை சம்பவம் அவர் குடியிருக்கும் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை