உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணத்துடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

பணத்துடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

பாகூர் : மனைவி பணத்துடன் மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பாகூர், மேற்கு தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர் 34; கிரேன் ஓட்டுனர். இவரது மனைவி சுபாஷினி, 29; இரண்டு மகன்கள் உள்ளனர். சுபாஷினி, ஒரு வருடமாக ஜிப்மரில் மனநலம் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று, வந்தார். கடந்த 24ம் தேதி, பாலச்சந்தர் சுபாஷினியிடம், ஏன் சமையல் செய்யவில்லை என சத்தம் போட்டுள்ளார். அன்று மாலை மனப்பட்டு கடற்கரைக்கு சென்று வரலாம் என சுபாஷினியை அழைத்தார். அவர், வர மறுத்ததால், பாலச்சந்தர், இரு மகன்களையும் அழைத்து சென்றார். மாலை 6:00 மணிக்கு வந்துபோது, வீடு பூட்டி இருந்தது. வழக்கமான இடத்தில் இருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை காணவில்லை. சுபாஷினியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பாலச்சந்தர், தனது உறவினர்கள் உதவியுடன் சுபாஷினியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை