உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

புதுச்சேரி : உருளையன்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோனிராஜ், 50, இவர், புதிய பஸ் நிலையம் அருகே, கவரிங் கடை நடத்தினார். கடந்த கொரோனா காலத்தில், வியாபாரம் இல்லததால், பல இடங்களில் கடன் வாங்கினார். மேலும், பஸ் நிலையம் புனரமைக்கும் பணியால், கடை திறக்காமல் இருந்தார்.கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து அவருக்கு நெருக்கடி கொடுத்ததால், மனஅழுத்தத்துடன் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டில், துாங்கியவர் மாயமானார். இதுகுறித்து, அவரது மனைவி மேகா உருளையன்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை