மேலும் செய்திகள்
நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06-Apr-2026
புதுச்சேரி: குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்தவர் திலீபன்; வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். வெளிநாட்டில் இருந்து புதுச்சேரிக்கு வந்த இவருக்கும், அவரது மனைவி தேசம்மாளுக்கும் இடையே கடந்த 17ம் தேதி குடும்ப பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, திலீபன் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, திலீபனை தேடி வருகின்றனர்.
06-Apr-2026