உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

புதுச்சேரி: சேதராப்பட்டு அருகே கணவரை காணவில்லை என, மனைவி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி, ராமநாதபுரத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் சிங்காரவேலு, 52. இவர், கடந்த 31ம் தேதி வீட்டில் வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இவர் மனைவி சரோஜா அளித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து சிங்காரவேலுவை தேடி வருகின்றனர். காணாமல் போன சிங்காரவேலு பற்றி தகவல் தெரிந்தால், சேதாராப்பட்டு போலீஸ் ஸ்டேஷன், தொலைபேசி எண் 0413 2677404, வட்ட ஆய்வாளர் (தன்வந்திரி நகர்) 0413 2276417, எஸ்.பி., (வடக்கு) 0413 2276584 மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை 100 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்க வேண்டும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை