மேலும் செய்திகள்
சிவசுப்ரமணியர் கோவிலில் கந்தர்சஷ்டி சூரசம்ஹாரம்
29-Oct-2024
புதுச்சேரி: சாரம் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தர் சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது.புதுச்சேரி, சாரம் முத்து விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கந்தர் சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கி, 14ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, நேற்று (1ம் தேதி) மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத் சங்கிரஹணம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று (2ம் தேதி) காலை 7:00 மணிக்கு அபிஷேகம் மற்றும் கொடியேற்றம் நடக்கிறது. வரும் 7ம் தேதி இரவு 7:00 மணிக்கு சக்தி வேல் வாங்குதல், ஆட்டு கிடா வாகனத்தில் சூரசம்ஹாரம், 8ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 10ம் தேதி காலை 8:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், இரவு 7:00 மணிக்கு கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.
29-Oct-2024