உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகை

 பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகை

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி, வி.வி.பி. நகர் பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் விழா நடந்தது. லெனின் வீதி, கீர்த்தி மகாலில் நடந்த விழாவிற்கு, சங்கத் தலைவர் பிரபாகரன் வரவேற்றார்.விழாவில், சீனியர் எஸ்.பி., கலைவாணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இளங்கோவன், இணைப் பதிவாளர் சாரங்கபரணி, துணைப் பதிவாளர் குணசேகரன், கூட்டுறவு அதிகாரி தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு, 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு முறையே ரூ. 10 ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம் பரிசு வழங்கினர். தொடர்ந்து, தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ரூ. 2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விழாவில், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் குப்புராமன், இயக்குனர்கள் மருதாச்சலம், இளங்கோவன், கணேஷ், பெருமாள், லட்சுமணன், பூவரசன், வசந்தராஜன், ராஜேந்திரன், புஷ்ப சந்துரு ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குனர் மணிகண்டன் தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை