வருமான வரி ஓய்வூதியர் சங்கம் துவக்க விழா
புதுச்சேரி: கடலுார் மண்டல, வருமான வரி ஓய்வூதியர் சங்கம் புதுச்சேரியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வருமான வரி ஓய்வூதியர் சங்கத்தின் கிளை தமிழகத்தில் மதுரை, கோவை, சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மண்டலங்கள் உள்ளது. தற்போது 6வது மண்டலமாக கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி மாவட்டங்களை இணைத்து கடலுார் மண்டல வருமான வரி ஓய்வூதியர் சங்க துவக்க விழா நேற்று புதுச்சேரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, சங்க செயலாளர் கணேசன் வரவேற்றார். மண்டல தலைவர் மணிமாறன், சென்னை வருமான வரி அதிகாரிகள் சங்க தலைவர் கண்ணன், ஓய்வூதியர் சங்க தலைவர் கணேஷ்பாபு, ஓய்வூதியர் தேசிய ஒருங்கிணைப்பு குழு நடராஜன், ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் பெருமாள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி சங்கத்தை தொடங்கி வைத்து பேசினர். ஓய்வூதியர் தேசிய ஒருங்கிணைப்பு குழு செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கடலுார் மண்டல துணை தலைவர் முருகன் நன்றி கூறினார்.