உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நேஷனல் பள்ளியில் சுதந்திர தின விழா

நேஷனல் பள்ளியில் சுதந்திர தின விழா

பாகூர்: தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் எழிலரசி கிரண்குமார் வரவேற்றார். பள்ளியின் சேர்மன் கிரண்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் டிரஸ்டியும், பா.ஜ., ஓ.பி.சி., அணி மாநில தலைவருமான சக்தி கிருஷ்ணராஜ்,  ஆடிட்டர் லட்சுமி  ஆகியோர் கலந்து கொண்டு, சுதந்திர தின விழாவின் சிறப்புகள் குறித்தும், விடுதலைக்காக போராடிய தலைவர்கள் குறித்தும் பேசினர். விழாவையொட்டி, மாணவ – மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியை உமா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி