மேலும் செய்திகள்
கலசலிங்கம் பல்கலையில் உயிரியல் சர்வதேச மாநாடு
17-Jul-2026
கீழே சேர்க்கவும் டிசி படங்கள் புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் 80வது சுதந்திர தின விழா நடந்தது. பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ்பாபு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்ற ‘வீடு தோறும் தேசிய கொடி’ (ஹர் கர் திரங்கா) விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதேபோல், லாஸ்பேட்டை பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரியிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பா.ஜ.: கதிர்காமம் தொகுதி ரத்னா நகரில் பா.ஜ., மாநில ஊடகப்பிரிவு சார்பில நடந்த விழாவில், முன்னாள் ராணுவ வீரர் கோவிந்தசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில், ஊடகப் பிரிவு தலைவர் நாகேஸ்வரன், கிளைத் தலைவர் அருணாச்சலம், மாவட்டத் தலைவர் உலகநாதன், முருகன், காமராஜ், தேவநாதன், பிரபு உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
17-Jul-2026