உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சுயேச்சை வேட்பாளர் சரவணன் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு

 சுயேச்சை வேட்பாளர் சரவணன் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி சுயேச்சை வேட்பாளர் சரவணன், கம்பன் நகர் பகுதியில் நேற்று வீடு வீடாக சென்று குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் ஆர்த்தி எடுத்து, மலர் துாவி வரவேற்றனர். அப்போது வேட்பாளர் சரவணன் பேசுகையில், கம்பன் நகர் பகுதிகளில் உள்ள பிரச்னைகளை சரி செய்து கொடுக்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாயப்பு மற்றும் இங்கு உள்ள மக்களுக்கு அரசு திட்டங்கள், உதவிகளை கொண்டு வந்து சேர்ப்பேன். அதற்கு நீங்கள் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு போட்டு என்னை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என, கேட்டுக் கொண்டார். ஓட்டு சேகரிப்பின் போது அந்தந்த பகுதி முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை