உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சுயேச்சை வேட்பாளர் சரவணன்  குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு

 சுயேச்சை வேட்பாளர் சரவணன்  குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: உழவர்கரை சட்டசபை தொகுதியில் சமூக சேவகர் சரவணன் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். தொகுதியில் பல்வேறு இடங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவருக்கு பொதுமக்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்பு அளித்து வருகின்றனர். நேற்று அரும்பார்த்தபுரம், வசந்தம் நகர் பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். அப்போது அப்பகுதி மக்கள் சரவணனுக்கு ஆரத்தி எடுத்து மலர் துாவி வரவேற்றனர்.அப்போது வேட்பாளர் சரவணன் பேசுகையில், அரும்பார்த்தபுரம் பகுதியில் சுத்தமான குடிநீர், பாதாள சாக்கடை கொண்டுவரப்படும்.மேலும் இளைஞர்களுக்கு வேலைவாயப்பு மற்றும் இங்கு உள்ள மக்களுக்கு அரசு திட்டங்கள், உதவிகளை கொண்டு வந்து சேர்ப்பேன் எனவே நீங்கள் குக்கர் சின்னத்தில் ஓட்டு போட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஓட்டு சேகரிப்பின் போது அந்தந்த பகுதி முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் பெண்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை