உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்கட்டண உயர்வை கண்டித்து இண்டி கூட்டணி ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து இண்டி கூட்டணி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: மின்கட்டண உயர்வை திரு ம்ப பெற கோரி இண்டி கூட்டணி கட்சியினர் தலைமை செயலகம் நோ க்கி ஊர்வலமாக சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் மின்கட்டணம் யூனிட்டுக்கு 20 பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை திரும்ப பெற அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் மின்கட்டண உயர்வை அரசே மானியமாக ஏற்கும் என, அறிவித்தார். இதுதொடர்பான கோப்பு பரிசீலனையில் இருப்பதாக கவர்னர் கைலாஷ்நாதனும் தெரிவித்தார். இந்நிலையில் மின்கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி, இண்டி கூட்டணி கட்சியினர் பங்கேற்ற ஊர்வலம் மற்றும் ஆர்ப் பாட்டம் நேற்று நடந்தது. மிஷன் வீதி, ஜென்ம ராக்கினி கோவில் அருகே இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம், தி.மு.க., அமைப்பாளர் சிவா, இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், மா.கம்யூ., மாநில செயலாளர் ராமச்சந்திரன், வி.சி.க., முதன்மை செயலாளர் தேவ பொழிலன் தலைமை தாங்கினர். ஊர்வலம் மிஷன் வீதி, அம்பலத்துமடையார் வீதி வழியாக தலைமை செயலகம் நோக்கி சென்றபோது, ஆம்பூர் சாலை அருகே போலீசார் பேரிகார்டு அமைத்து தடுத்தனர். இதையடுத்து, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அங்கேயே இண்டி கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், தி.மு.க., அவைத் தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க் கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், பாலன், நாரா கலைநாதன், சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், தனுசு, ஏ.ஐ.டி.யூ.சி., சேதுசெல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sridhar T.S
நவ 05, 2025 10:14

தமிழ் நாட்டில் ஏற்றப்பட்ட மின்கட்டணம்‌ ஏற்றப்பட்டபோது இந்த கூட்டணி என்ன செய்தது


sekar ng
நவ 05, 2025 08:09

இத்தனை நாட்கள் தூங்கி விட்டு, சீட்டுக்காக போராடும் மக்கள் துரோகிகள். இவர்களை மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை