உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திய அஞ்சல் துறை குறைகேட்பு நாள் முகாம்

இந்திய அஞ்சல் துறை குறைகேட்பு நாள் முகாம்

புதுச்சேரி: இந்திய அஞ்சல்துறை குறைகேட்பு நாள் முகாம் வரும் 15ம் தேதி, புதுச்சேரி அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது.முதுநிலை கண்காணிப்பாளர் செய்திக்குறிப்பு:புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்களின் குறை கேட்பு நாள் வரும் 15ம் தேதி காலை 11:00 மணியளவில் நடக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் அஞ்சல் துறை சேவையில் உள்ள ரிஜிஸ்டர் லட்டர், பார்சல், மணி ஆர்டர், ஸ்பீடு போஸ்ட், காப்பீடு தொடர்பானவை குறித்து தெரிவிக்கலாம்.வாடிக்கையாளர்கள் தங்களது குறைகள், ஆலோசனைகளை வரும் 14ம் தேதிக்கு முன்பாக பாண்டிச்சேரி கோட்ட அஞ்சல் அலுவலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பலாம்.மேலும் இணையதளம் (www.indiapost.gov.in) e-mail (dopondicherry.indiapost.gov.in) அனுப்பி வைக்கலாம். அனைத்து புகார்களும் 'அஞ்சல் குறை கேட்பு புகார் என்று குறிப்பிட்டு அனுப்பவும்.மேலும் விவரங்களுக்கு, 0413-2334837, 2337017, 2225373 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். அனைத்து அஞ்சல்துறை வாடிக்கையாளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் குறைகளை தெரிவித்து பயனடையுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை