உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில், சுகாதாரமான குடிநீர் வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூ., சார் பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு, நேற்று காலை 10:00 மணியளவில, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள், தினேஷ் பொன்னையா, அந்தோணி, ஜிவானந்தம், முருகன், எழிலன், ராதாகிருஷ்ணன், கோவிந்தசாமி, சரவ ணன். ஆனந்த், துரை செல்வம், நளவேந்தன், அரிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போர்கால அடிப்படையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை, இணைந்து, சுகாதாரமான குடிநீரை வழங்குவதை உறுதி செய்ய வலியுறுத்தியும், மெத்தன போக்கில் இருக்கும் பொதுப்பணித்துறையினர் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை