மேலும் செய்திகள்
இந்திய கம்யூ., மாநிலக்குழு கூட்டம்
26-May-2025
புதுச்சேரி: இந்திய கம்யூ., உழவர்கரை தொகுதி மாநாடு, ஜவகர் நகர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.மாநாட்டு கொடியை முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன் ஏற்றி வைத்தார். மாநில செயலாளர் சலீம் மாநாட்டை துவக்கி வைத்தார். தேசியக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், மாநில பொருளாளர் சுப்பையா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.தொகுதி செயலாளர் அன்பழகன் அறிக்கை சமர்ப்பித்தார்.இதில், மாநிலக்குழு உறுப்பினர்கள் தேவசகாயம், முரளி, நளவேந்தன், தொகுதி பொருளாளர் ஜெயின் அந்தோணி தாஸ், அஞ்சலி தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மாநாட்டில், உழவர்கரை தொகுதி முழுதும் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். பாவாணர் நகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்றிவிட்டு, தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
26-May-2025