உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திய கம்யூ., தொகுதி மாநாடு

இந்திய கம்யூ., தொகுதி மாநாடு

பாகூர் : இந்திய கம்யூ., பாகூர் தொகுதி 29 வது மாநாடு நடந்தது. மாநாட்டில், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் கொடியேற்றி வைத்தார். மாநில செயலாளர் சலீம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநில குழு ராமமூர்த்தி, மாநில துணை செயலாளர் சேது செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொகுதி செயலாளர் ஆறுமுகம் மாநாட்டு அறிக்கை வாசித்தார். தேசிய குழு தினேஷ் பொன்னையா, தொகுதி குழு ராஜா, கலியமூர்த்தி, மாநில குழு விஜயபாலன், வழக்கறிஞர் ரவீந்திரன், பொருளாளர் நாராயணன், தசரதா, ஆதி மூலம், கங்காதரன், ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். மாநாட்டில், பாகூரில் மா ணவிகளுக்கு தனியாக அரசு தொடக்கப்பள்ளி அமைக்கப்பட வேண்டும். விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை பாகூர் - பின்னாட்சிக்குப்பம் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, கோரிக்கை விளக்க ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி