உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திய கம்யூ., தொகுதிக்குழு மாநாடு

இந்திய கம்யூ., தொகுதிக்குழு மாநாடு

புதுச்சேரி: இந்திய கம்யூ., லாஸ்பேட்டை மற்றும் காலாப்பட்டு தொகுதிக்குழு மாநாடு நடந்தது. லாஸ்பேட்டை அசோக் நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்த மாநாட்டை, ஏ.ஐ.டி.யு.சி முன்னாள் தலைவர் கலியபெருமாள் கொடியேற்றி துவக்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், இந்திய கம்யூ., துணை செயலாளர் சேது செல்வம், தினேஷ் பொன்னையா, பொருளாளர் சுப்பையா, வழக்கறிஞர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகி த்தனர். தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன் மாநாட்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் ராமு வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்தார். நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். லாஸ்பேட்டையில், மாணவர்களை குறித்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. மேலும், வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான உயிர்காக்கும் மருந்து, மாத்திரைகளும், 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லுாரி சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ