உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உப்பனாறு வாய்க்கால் பாலத்தை விரிவுப்படுத்த இந்திய கம்யூ., தீர்மானம்

உப்பனாறு வாய்க்கால் பாலத்தை விரிவுப்படுத்த இந்திய கம்யூ., தீர்மானம்

புதுச்சேரி: உப்பனாறு வாய்க்கால் பாலத்தை, ஜீவா நகர் வரை விரிவுபடுத்த வேண்டும் என காமராஜ் நகர் தொகுதி இந்திய கம்யூ., தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. காமராஜர் நகர் தொகுதி இந்திய கம்யூ., குழு மாநாடு, புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள தனியார் மகாலில் நடந்தது. மாநாட்டிற்கு, ஞானசங்கர், மாதவராமன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் விசுவநாதன் மாநாட்டு கொடியேற்றினார். செயலாளர் சலீம் மாநாட்டை துவக்கி வைத்த பேசினார். ஏ.ஐ.டி.யூ.சி., செயலாளர் சேதுசெல்வம், பொருளாளர் சப்பையா வாழ்த்தி பேசினர். தொகுதி செயலாளராக துரை செல்வம், துணை செயலாளராக தயாளன், பொருளாளராக மாதவராமன் உள்ளிட்ட 11பேர் கொண்ட தொகுதி குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில், வரும் 2026ம் ஆண்டு தேர்தலில், காமராஜர் நகர் தொகுதியில் சூதாட்டம், வரி ஏய்ப்பு, கோவில் நிலம் ஆக்கிரமிப்பு கும்பலை வீழ்த்தி ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து செல்ல வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தொடர்ந்து, சாரம் எஸ்.ஆர். சுப்ரமணியம் உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். உப்பனாறு வாய்க்கால் பாலத்தை, ஜீவா நகர் வரை விரிவுபடுத்த வேண்டும். போதை பொருள் விற்பனையை தடுத்திட வேண்டும். சாமிபிள்ளை தோட்டம், கர்ணா ஜோதி நகர், அணைக்கரைமேடு, லெனின் நகர் வீடுகளில், பாதாள சாக்கடைகள் இணைப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி