உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திய அரசியலமைப்பு தினம் காங்., விழிப்புணர்வு ஊர்வலம்

இந்திய அரசியலமைப்பு தினம் காங்., விழிப்புணர்வு ஊர்வலம்

புதுச்சேரி: புதுச்சேரி காங்., சார்பில் இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு புதுச்சேரி காங்., சார்பில் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஊர்வலம் நடந்தது. ஊர்வலம், அண்ணா சாலையில் துவங்கி நேரு வீதியாக சென்று சம்பா கோவில் அருகில் முடிந்தது. ஊர்வலத்தில் முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., வைத்தியநாதன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு மற்றும் காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ