உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 88வது நிறுவன தினம்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 88வது நிறுவன தினம்

புதுச்சேரி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 88வது, நிறுவன தினத்தையொட்டி, சேலம் மண்டல அலுவலகத்தில் மெகா சுகாதார பரிசோதனை முகாம் நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 88வது நிறுவன தினத்தை முன்னிட்டு, விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையுடன் இணைந்து, சேலத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகத்தில் மெகா மருத்துவப் பரிசோதனை முகாமை நடத்தியது. முகாமை, முதுநிலை மண்டல மேலாளர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து, அனைவரையும் வரவேற்றார். இதில், விநாயகா மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். முகாமில், 100க்கும் மேற்பட்டோர் உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.மேலும், முகாமில், வங்கியின் சிறப்புகள், சேமிப்பு, கடனுதவி திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. முகாமில், வங்கியின் மண்டல அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை