உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

புதுச்சேரி: மழை நிவாரணத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரூ. 10 ஆயிரம் நிவாரணம்

இது குறித்து அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் அறிக்கை: மழை தண்ணீர் புகுந்து மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளன. அந்த வீடுகளை கண்டறிந்து அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் அறிவிக்க வேண்டும்.புதுச்சேரியில் மழைநீர் தேங்குவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் ஓட்டுனர் உரிமம், வங்கி, பென்ஷன் புத்தகம் உள்ளிட்டவை பறிபோகியுள்ளது. அவற்றை உடனடியாக கிடைக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகூர் பகுதிகளில் கணக்கீடு செய்து உரிய நிவாரணம் அறிவிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

குப்பை அகற்ற கோரிக்கை

எம்.எல்.ஏ., கோரிக்கைநேரு எம்.எல்.ஏ., முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உருளையன்பேட்டை தொகுதி உப்பனாறு வாய்க்கால் கரையோர குடியிருப்புகளில் வசித்த 2 இரண்டு பேர் உயிரிழந்தனர். கோவிந்தசாலை, முடக்கு மாரியம்மன் கோவில் தெரு, அந்தோணியார் கோவில் தெரு, குடிசை மாற்று வாரிய அரசு குடியிருப்பு, நேரு நகர், பாரதிதாசன் வீதி, குபேர் நகர், வாஞ்சிநாதன் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதி வீடுகளில் மழை வெள்ளத்தில் நாசமான பொருட்களை மக்கள் வீதிகளில் வீசி வருவதால், குப்பை மேடாக காட்சியளிக்கிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பைகளை அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை என, கூறப்பட்டுள்ளது.

6 ஆயிரம் வீடுகள் பாதிப்பு

சிவசங்கர் எம்.எல்.ஏ., கூறுகையில், 'இந்திரா நகர், கதிர்காமம் உள்ளிட்ட மேடான பகுதிகளில் ஓடைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் எனது தொகுதியான தாழ்வான பகுதிகளில் புகுந்துள்ளது. மொத்தமுள்ள 6 ஆயிரம் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து தத்தளிக்கின்றன. வீடுகளில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளது. எனது தொகுதியில் ஒவ்வொரு வீட்டிற்கும் சிறப்பு நிவாரணமாக 30 ஆயிரம் ரூபாய் தர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ