மேலும் செய்திகள்
விபத்து காப்பீடு வழங்கல்
30-Oct-2026
மருத்துவப்படி வழங்க ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
10-Oct-2026
புதுச்சேரி: ஓய்வூதியர்கள் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை அஞ்சல் ஊழியர்கள் மூலம் தங்கள் வீட்டில் இருந்தபடியே சமர்ப்பித்து கொள்ளலாம். இதுகுறித்து, அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் காவ்யா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு; இந்திய அஞ்சல் துறை – இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் எளிய முறையில் மின்னணு உயிர் வாழ் சான்றிதழ் பெறும் வசதி செய்துள்ளது. ஓய்வூதியர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே, அஞ்சல் ஊழியர்கள் மூலம் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பித்து கொள்ளலாம். மேலும், ஜீவன் பிரமாண் இணைய தளத்தில் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்கள், பாதுகாப்பு துறை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், பி.எஸ்.என்.எல்., சென்னை துறைமுகம், மின்சார வாரியம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், சென்னை மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த ஓய்வூதியர்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
30-Oct-2026
10-Oct-2026