உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உழவர்கரை நகராட்சியின் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

உழவர்கரை நகராட்சியின் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

புதுச்சேரி: பொதுசேவை மையங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என உழவர்கரை நகராட்சி அறிவித்துள்ளது.புதுச்சேரி அரசு பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் எளிமையாக கிடைக்க பொது சேவை மையங்களில் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், பொது சேவை மையங்களை புறந்தள்ளிவிட்டு மீண்டும் நகராட்சி அலுவலகங்களில் பிறப்பு, இறப்பு கேட்டு குவிந்து வருகின்றனர்குறிப்பாக, உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற அலுவலக நாட்களில் மக்கள் அதிக அளவில் குவிந்து விடுகின்றனர்.அவர்கள் தொலைதுாரத்தில் இருந்து வருவதால் உழவர்கரை நகராட்சி வேலை பளுவில் திணறி வருகின்றது.எனவே இனி, 2023-2024 ஆண்டு முதல் பிறப்பு, இறப்பு சான்றிதழ் மட்டுமே உழவர்கரை நகராட்சி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.இது குறித்து உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, 2023-24 ஆண்டு முதல் பிறப்பு, இறப்பு சான்றிதழ் மட்டும் உழவர்கரை நகராட்சியில் வழங்கப்படுகின்றன. அதற்கு முந்தைய பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பொது நலன் கருதி, புதுச்சேரியில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அலைச்சல் இல்லாமல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !