உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை டிச., 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

 வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை டிச., 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் டிச., 4ம் தேதிக்குள் கணக்கெடுப்பு படிவங்கள் சமர்ப்பிக்காத வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெறாது என, கலெக்டர் குலோத்துங்கன் எச்சரித்துள்ளார். அவரது, செய்திக்குறிப்பு; புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த அக்., 28ம் தேதி முதல் வரைவு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது.அதன் ஒர பகுதியாக கடந்த நவ., 4ம் தேதி முதல் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை வினியோகம் செய்தனர். நவ., 26ம் தேதி வரை புதுச்சேரி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 775 பேரில், 8 லட்சத்து 24 ஆயிரத்து 271 பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டது. அதில், 6 லட்சத்து 44 ஆயிரத்து 502 வாக்காளர்களிடம் இருந்துபடிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள வாக்காளர்களின் படிவங்கள் சேகரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த அட்டவணையின்படி வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் டிச., 4ம் தேதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரும் டிச., 4ம் தேதிக்குள் கணக்கெடுப்பு படிவங்கள் சமர்ப்பிக்காத வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெறாது. எனவே, கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்காத வாக்காளர்கள் வரும் டிச., 4ம் தேதிக்குள் ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்களை சமர்ப்பித்து, புதுச்சேரியில் பிழையில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை