உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்படிப்பில் உள் ஒதுக்கீடு : முதல்வர் ரங்கசாமி தகவல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்படிப்பில் உள் ஒதுக்கீடு : முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு, அனைத்து உயர் படிப்புகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்க பரிசீலித்து வருவதாக முதல்வர் ரங்கசாமி பேசினார்.புதுச்சேரி அடுத்த நல்லவாடு கிராமத்தில், மீனவர் நலத்துறை சார்பில் நடந்த விழாவில், மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி வழங்கிய முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் மூலம் அதிக வருவாய் வருவதால், மக்கள் மீது வரியை நேரடியாக திணிக்காமல் திட்டங்களை செயல்படுத்தும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள முடிகிறது. எனவே, சுற்றுலாவை மேம்படுத்துவது முக்கியமாக இருக்கிறது. மீனவர்களின் கோரிக்கையை ஏற்று நல்லவாடில் புதிய துறைமுகம் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியது போல், பிற படிப்புகளுக்கும் உள் ஒதுக்கீடு வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. மீனவ சமுதாய மக்களுக்கு ஒதுக்கப்படுகின்ற ரூ.123 கோடி நிதியை முழுவதுமாக செலவிடுகின்ற நடவடிக்கையை அரசு செயல்படுத்துப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ