மேலும் செய்திகள்
கணனி அறிவியல் கருத்தரங்கம்
22-Dec-2025
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், புதுச்சேரி அரசு சுற்றுலா மற்றும் மேம்பாட்டு துறையுடன் இணைந்து தொழில்நுட்ப நுண்ணறிவு சர்வதேச மாநாடு பல்கலைக்கழகம் கருத்தரங்கம் கூடத்தில் நடந்தது. மாநாட்டை தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இயக்குநர் விவேகானந்தன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கராக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சேர்ந்த பேராசிரியர் ஷமிக் சுரல், அமெரிக்கா பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தகவல் பள்ளி பேராசிரியர் பாலாஜி பாழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாநாட்டில் 400 பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை மாணவர்கள், வெளிநாடுகளிலிருந்து கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு, தரவு பாதுகாப்பு, பகுப்பாய்வு துறைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது. மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 300 ஆய்வு கட்டுரைகள் பெறப்பட்டு, அதில் 124 ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, 13 தொழில்நுட்ப அமர்வுகளில் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் இளவரசன், பேராசிரியர்கள் கல்பனா, ஜெயபாரதி, சாருலதா, சத்தியமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
22-Dec-2025