மாற்றுத்திறனாளிகள் தின விழா
புதுச்சேரி: மாகியில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், சபாநாயகர் செல்வம் பங்கேற்று, போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்டினார். புதுச்சேரி பிராந்தியம் மாகியில், நேற்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செவ்வம் கலந்து கொண்டார். ரமேஷ் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு சபாநாயகர் பரிசு வழங்கி, பாராட்டினார். நிகழ்ச்சியில், பிராந்திய நிர்வாக அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.