உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சர்வதேச குறும்பட திருவிழா புதுச்சேரியில் துவங்கியது

சர்வதேச குறும்பட திருவிழா புதுச்சேரியில் துவங்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் சர்வதேச ஆவணப்பட குறும்பட திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புதுச்சேரி பல்கலை., மின்னணு ஊடகம் மற்றும் வெகுஜன தொடர்பியல் துறை, இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், புதுச்சேரி திரைப்பட இயக்கம் ஆகியன இணைந்து சர்வதேச ஆவணப்பட குறும்பட திருவிழாவை நடத்துகிறது. இந்த விழாவை பல்கலை வளாகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் நேற்று காலை 9:30 மணிக்கு, அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை வேந்தர் தரணிக்கரசு, திரை இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில் திரை இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். விழா நாளையுடன் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை